நல்லாசிரியரின் பண்புகள்
======================
நல்லாசிரியருக்குரிய பண்புநலன்களை நம்முடைய நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் அன்றே சொல்லியிருப்பதை இங்கே நினைவுக்கூர்வது பொருத்தமாக இருக்கும்.
அதாவது:-
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரைவன்மை
நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே (நூற்பா26)
1.நற்குடிப்பிறப்பு
2.உயிரிரக்கப்பண்பு(சீவகாருண்யம்)
3.கடவுள் வழிபாடு
4.மேன்மையான குணம்
5.பல்கலை பயின்ற ஆற்றல்
6.மாணவர்க்குப் புரியும்படி கற்பிக்கும் வன்மை
7.நிலம் போன்ற பொறுமை
8.மலைபோன்ற உயர்ச்சிந்தை
9.துலாக்கோல் போன்ற நடுவிநிலைமை
10.மலர் போன்ற மென்மை
11.உலகியல் அறிவு
12.உயர்குணங்கள் அனைத்தும்
இப்படியான தகுதிகள் அமையப்பெற்றவரே நல்லாசிரியர் என்பது நமது தமிழ் முன்னோர் வகுத்த மரபு.
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதை நினைவில் கொண்டு ஆசிரியர் அனைவரும் நல்லாசிரியர் ஆகுவோம்!!


0 comments:
Post a Comment